Tap to Read ➤

படையப்பா படத்திற்கு பின் தலைவர் படத்தில் மீண்டும் நீலாம்பரி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல்களின் முழு விவரங்கள்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் 'ரஜினிகாந்த்' நடிக்கும் திரைப்படம், தலைவர் 169.
'தலைவர் 169' திரைப்படம் நெல்சன் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவாகவுள்ளது
விமர்சன ரீதியாக பீஸ்ட் படம் சரிவை கண்டுள்ள நிலையில், நெல்சன் தற்போது இயக்கும் 'தலைவர் 169' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
'தலைவர் 169' படத்தில் ரஜினியின் மகளாக 'பிரியங்கா அருள் மோகன்' மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் 'தலைவர் 169' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
படையப்பா படத்தில் ரஜினி - ரம்யா கிருஷ்ணன் (படையப்பா - நீலாம்பரி) கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஆகும்.
நீண்ட இடைவேளைக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது, என வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் தலைவர் 169 படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன.
'தலைவர் 169' படத்தின் தகவல்கள்
தகவல்கள்