Tap to Read ➤

வெற்றிகரமாக 50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம் மூவி

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் வன்முறை இல்லாத காதலுக்கும்-இனக்கவர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக சொல்லியிருக்கிறது.
Filmibeat Tamil
சமீப காலத்தில் இதுபோன்ற எளிய கதையம்சம் உள்ள படம் வெளியாகி அது வெற்றியும் பெற்றதாக தெரியவில்லை. அந்த வகையில் திருச்சிற்றம்பலம் தனுஷுக்கு பேர் சொல்லும் படமே.
அம்மா, சகோதரியை விபத்தில் இழந்து தந்தை பிரகாஷ் ராஜ், தாத்தா பாரதிராஜாவுடன் வசிக்கிறார் தனுஷ். அம்மா மரணத்திற்கு காரணமான தந்தையை வெறுக்கிறார் தனுஷ்.
அவர் வீட்டின் கீழ் போர்ஷனில் வசிக்கிறார் நித்யா மேனன் பால்ய பருவத்திலிருந்தே தோழி. உரிமையுடன் வீட்டுக்குள் வந்துபோவது தனுஷுக்கு ஆலோசனை சொல்வது, என வளைய வருகிறார்.
தனுஷ் உணவு டெலிவரி பாய், நித்யா மேனன் ஐடி பொறியாளர் ஜாப்பில் இருக்கிறார். உணவு டெலிவரி நேரத்தில் பழைய பள்ளித்தோழி ராஷி கன்னாவை சந்திக்கிறார் தனுஷ்.
தோழி ராஷி கன்னா இவருடன் பேசுகிறார், ஹோட்டலுக்கு வரச்சொல்கிறார். அதை காதல் எனச் சொல்லி நித்யா மேனன் ஆலோசனையுடன் கவிதை தயார் செய்து போய் சொல்கிறார் தனுஷ். ராஷி கன்னா காதல் எல்லாம் இல்லை சும்மாதான் பழகினேன் என்று விலகி செல்கிறார்.
தனுஷுக்கு நித்யா மேனன் ஆறுதல் சொல்கிறார். தனுஷ் தந்தை பிரகாஷ் ராஜுக்கு பக்கவாதம் வருகிறது. அப்பாவை நேசிக்க தொடங்குகிறார். அனைவரும் தனுஷின் பாட்டி வழி திருமணத்திற்கு சொந்த ஊருக்கு செல்கிறார்கள், உடன் நித்யா மேனனும் செல்கிறார்.
அங்கு ஒரு பிரியா பவானிசங்கரை சந்திக்கிறார் தனுஷ். அந்தப்பெண் மீது காதல் வந்து ஆடிப்பாடுகிறார். ஊருக்கு கிளம்பும் முன் தன் காதை சொல்ல நித்யா மேனன் மூலம் தூது விட அவர் அழைத்து வருகிறார்.
வந்த பிரியா பவானி சங்கரிடம் ஊருக்கு கிளம்புவதைச் சொல்லி பேசி நட்பை தொடர் போன் நம்பர் கேட்க நான் எதற்கு போன் நம்பர் தரணும், நாம் ஏன் நட்பை தொடரணும் எனக்கேட்க அந்த காதலும் பணால். நித்யா மேனன் ஆறுதல் சொல்கிறார்.
பின்னர் தாத்தா தனுஷின் இனக்கவர்ச்சியை புரிய வைக்கிறார், உண்மையான காதல் என்றால் என்ன, யார் உண்மையாக நேசிக்கிறார் என்று புரிய வைக்கிறார். உன்னை காதலிக்கும் பெண் நித்யா மேனன் அதுதான் காதல் என்கிறார்.
தனுஷுக்கு அதன் பின்னர் அனைத்து தவறுகளும் புரிகிறது. நித்யா மேனன் மீது காதல் வருகிறது. காதலை சொல்லும்போது நித்யா மேனன் கோபித்துக்கொண்டு தனக்கு கிடைத்த வெளிநாட்டு ஜாப்புக்காக கனடா செல்கிறார்.
நித்யா மேனன் 6 ஆம் வகுப்பிலிருந்து தனுஷை காதலிப்பதாகவும், அவளிடமே மற்ற பெண்களை காதலிக்க ஐடியா கேட்டு புண் படுத்தின உன் காதலை எப்படி அவள் ஏற்பாள் என்று நித்யா மேனனின் தம்பி செவிட்டில் அறைந்தால்போல் உண்மையை போட்டு உடைக்கிறார்.
3 ஆண்டுகள் கனடாவில் பணி முடிந்தப்பின் தனுஷ் நித்யா மேனன் இணைந்தார்களா? காதலை நித்யா மேனன் ஏற்றுக்கொண்டாரா என்பதே மீதிக்கதை. பாரதிராஜாவும், பிரகாஷ் ராஜும் படத்தில் கலக்கி இருப்பார்கள்.