Tap to Read ➤

2020-ல் தினக்கூலி..இன்று ஒரு வீடியோக்கு 7.5 லட்சம் டாலர் வருமானம்

இன்று ஒரு டிக் டாக் வீடியோக்கு 7.5 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார். கொரோனா ஊரடங்கால் திசை திரும்பியது வாழ்க்கை. Daily wage 2 years ago..
Filmibeat Tamil
இரண்டு ஆண்டுகளுக்கு முன் வறுமையில் வாடி தினம் 6, 7 டாலர் சம்பளத்துக்காக தினக்கூலி வேலைப்பார்த்த இளைஞர் இன்று டிக் டாக் உலகின் நம்பர் ஒன்.
கொரோனா காலத்தில் டிக்-டாக் செய்ய தொடங்கிய இளைஞர் இன்று ஒரு வீடியோவில் 7.5 லட்சம் டாலர் சம்பாதிக்கும் அளவு முன்னேறியுள்ளார்.
. கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப்போட்டது. உலகில் 3 முக்கிய நிகழ்வுகள் உலக மக்களை பெரிதும் பாதித்தது. அதில் கொரோனா பேரிடர் முக்கியமான ஒன்று.
முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரோனா பெருந்தொற்று. இவை மூன்றுமே பலரது வீட்டில் இறப்பையும், வாழ்க்கையை புரட்டிப்போடும் பொருளாதார இழப்பையும் கொடுத்தது.
ஆனால் சிலருக்கு தீமையிலும் நன்மையாக கொரோனா காலம் வாழ்க்கையை திருப்பி விட்டுள்ளது. அப்படி ஒருவர்தான் இத்தாலியில் வசிக்கும் கருப்பின இளைஞர் கேபி லேம்.
டிக்டாக்கில் 142.8 மில்லியன் ஃபாலோயர்ஸ் இவருக்கு உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை இப்போது 149.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இன்று கேபி லேம் ஒரு டிக்டாக் வீடியோக்கு மட்டும் 7.5 லட்சம் அமெரிக்க டாலர் பெறுகிறார். அவரது கடந்த ஆண்டு வருமானம் டிக் டாக்கில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்.
மிலன் பேஷன் வீக் ஷோவில் ராம்ப் வாக் நடக்கவும், அந்த ராம்ப் வாக் கிளிப்பை அவரது டிக்-டாக் கணக்கில் வெளியிடவும் காபி லேம் சமீபத்தில் $ 4.5 லட்சம் அமெரிக்க டாலரை பெற்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டு பிறந்த கேபி லேம் செனகல் நாட்டை சேர்ந்தவர், அவர் ஒரு வயதாக இருந்தபோது பெற்றோர் இத்தாலிக்கு குடியேறினர் அதுமுதல் மிலன் நகரில் லேபி லேம் குடியிருந்து வருகிறார்.
20 வயது வரை அவர் தினம் 6, 7 டாலர் சம்பாதிக்கும் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். ஒரு நெருக்கமான குடியிருப்பில் வசித்து வந்தார்.
கொரோனா உலகெங்கும் பரவியபோது அது இத்தாலியை கடுமையாக பாதித்தது. பொது முடக்கம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வருமானமின்றி வாடினார் கேபி லேம்.
அப்போது பொழுதுபோகாமல் வீட்டில் முடங்கி கிடந்த அவர் டிக்டாக்கில் இணைந்தார். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆடல், பாடல் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
காமென் சென்ஸ் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். டிக்டாக்கில் வரும் காணொலிகள் அல்லது மற்ற பிரபலமான காணொலிகளை எடுத்து அதில் உள்ள சின்ன குறையையை சட்டையர் செய்ய ஆரம்பித்தார். அமைதியான குறும்புத்தனமான அவரது டிக் டாக் வீடியோக்களுக்கு கூடிய மவுசு கூடியது.
கேபி லேம் புகழால் அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு புகழ்பெற்ற பிரெஞ்சு படத்தை வெளியிட்டார்.
. உலகின் முன்னணி விளம்பர நிறுவனமான ஜெர்மனில் உள்ள ஹியூகோ பாஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளுக்கு விளம்பர பார்ட்னட்ராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் லட்சக்கணக்கணக்கான டாலர் வருமானம் கிடைக்கும் .
கேபி லேம் இன்று உலகின் மிகப்பெரிய நம்பர் ஒன் டிக் டாக் நடசத்திரம். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவரை 142 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இன்ஸ்டாவில் 79 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள ஒரு மிகப்பெரிய நடிகர், கிரிக்கெட் நட்சத்திரத்தைவிட லேம் அதிகம் சம்பாதிக்கிறார் அதிகமான ஃபாலோயர்ஸை வைத்துள்ளார். இப்படிப்பட்டவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிலன் நகரச்சாலையில் 7 டாலருக்கு தினக்கூலியாக வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா.
தீமையிலும் சிலருக்கு நன்மை கிடைக்கும், நம்புங்கள் உங்கள் வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறும். அதற்காக செய்யவேண்டியது கடின உழைப்பை மட்டுமே.
லேம் இப்போது அமெரிக்க கார்ட்டூன்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்து ஆங்கிலம் கற்கிறார். அவர் ஒரு நாள் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துடன் ஒரு திரைப்படத்திலாவது நடிப்பதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.