Tap to Read ➤

உலக சினிமா வரலாற்றில் சாதனைப்படைத்த டைட்டானிக்

உலக சினிமா வரலாற்றில் சாதனைப்படைத்த டைட்டானிக்
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்தச்சம்பவத்தின் அடிப்படையில் மிகுந்த பொருட்ச்செலவில் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனால் எடுக்கப்பட்ட படம் டைட்டானிக்.
சம்பவ அடிப்படையில் எடுக்காமல் மெல்லிய காதலையும் கதையுடன் பின்னி பிணையும் வகையில் எடுத்திருப்பார்.
ஜாக்-ரோஸ் காதல் ஜோடி படத்தின் ஹைலைட். கப்பல் மூழ்கும்போது அவர்கள் தப்பிக்க முயல்வதை ஆழமாக படமாக்கியிருப்பார்.
ஜாக் ரோலில் அறிமுகமான டிகார்பியோ பின் நாளில் பிரபல நடிகராக நடிப்புத்திறமையால் உயர்ந்தார்.
டைட்டானிக் பட்ஜெட் அதிகமானதால் ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்கள் செலவை பகிர்ந்தன.
உலக திரைப்பட வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் டைட்டானிக் சுமார் 200 மில்லியன் டாலர். அதேபோல் 2.02 பில்லியன் வசூலையும் பெற்றுத்தந்தது.
கடைசியில் கப்பல் மூழ்கும் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். காதலியை காப்பாற்றிவிட்டு ஜாக் உயிரிழக்கும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்.
இன்று இதே நாளில் டைட்டானிக் படம் 11 ஆஸ்கர் அவார்டுகளை அள்ளி குவித்த நாள் ஆகும்.
டைட்டானிக் கப்பல் மூழ்கியதை வைத்து இதற்கு முன்னர் 2 படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
1943 ஆம் ஆண்டு ஜெர்மானிய நாஜி அரசால் பிரிட்டீஷ் அரசு மோசம் என்று சித்தரிப்பதுபோல் டைட்டானிக் படம் எடுக்கப்பட்டது.
1958 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசால் எ நைட் டு ரிமம்பர் என்கிற ப்டம் எடுக்கப்பட்டது. ஆனால் வசூல் ரீதியாக படம் தோல்வி அடைந்தது.
ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் வசூல் சாதனையை அவரது அவதார் படமே பின்னர் முறியடித்தது.