Tap to Read ➤

டாம் குரூஸின் டாப் கன் மேவ்ரிக் மினி விமர்சனம்

டாம் குரூஸ் ஹாலிவுட் உலகின் புகழ்பெற்ற நடிகர், ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து புகழ்பெற்றவர். விமானம், கார், பைக் என அவரது சாகசக்காட்சிகள் ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைத்துவிடும்.
இயக்குநர் டோனி ஸ்காட் இயக்கத்தில் டாம் க்ரூஸ் கடந்த 1986 ஆம் ஆண்டு நடித்த டாப் கன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அப்போதே ரியல் ஃபைட்டர் ஜெட்களை ஓட்டி சாகசம் செய்து நடித்த டாம் க்ரூஸ், 2022-ல் மீண்டும் ஃபைட்டர் ஜெட் விமானியாக 'டாம் கன் மேவரிக்' படத்தில் வானில் ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்தி உள்ளார்.
டாப் கன் திரைப்படம் டாம் க்ரூஸின் இன்னொரு மிஷன் இம்பாசிபிள் படமாகவே வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது.
தன்னுடன் பணியாற்றிய நபர்கள் எல்லாம் உயர் பதவியில் இருக்கும் போது, 30 ஆண்டுகளுக்கு பிறகும் ஃபைட்டர் ஜெட் விமானியாகவே டாம் க்ரூஸ் எந்தவொரு புரமோஷனும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக ஒரு மலைக்கு நடுவே பயங்கர பாதுகாப்புகளுடன் இருக்கும் யுரேனியம் ஆயுத கிடங்கை அழிக்கும் பணி டாம் குரூஸுக்கு ஒதுக்கப்படுகிறது.
டாஸ்க்கில் புதிய டீமுக்கு பயிற்சி கொடுத்து அந்த செம டஃப் ஆன டாஸ்க்கை செய்து முடிக்க கிளம்பும் டாம் க்ரூஸ் அதனை செய்தாரா? இல்லையா? என்பது தான் கதை.
உயிரிழந்த தன்னுடைய ஆருயிர் தோழனின் மகன் (மைல்ஸ் டெல்லர்) தனது டீமில் இருக்க, அவனை காப்பாற்றும் கடமையுடன் டாம் க்ரூஸ் ஒவ்வொரு காட்சிகளிலும் எமோஷனை எகிற வைத்துள்ளார்.
அதே சமயத்தில், டாம் க்ரூஸுக்கு எதிராகவே நண்பனின் மகன் (மைல்ஸ் டெல்லர்) ர் செயல்படுவதும் ரசிக்க வைக்கிறது.
டாம் க்ரூஸ் ஒரு பைக்கை எடுத்து ஓட்டிக் கொண்டு தடை செய்யப்பட்ட பகுதிக்கு வரும் காட்சியில் அவர் அறிமுகமாகிறார். ஜெட் விமானத்தை பூமியின் மேற்பரப்புக்கு ஓட்டிச் செல்லும் மிகவும் ரிஸ்க்கான சோதனையை மேற்கொள்கிறார்.
விமானம் கட்டுப்பாட்டை இழந்தவுடன் அதிலிருந்து தப்பிக்கும் டாம் குரூஸ் சாதாரணமாக ஒரு ரெஸ்டரன்ட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கும் ஆரம்ப காட்சி நிச்சயம் ஆரவாரம் கன்ஃபார்ம்.
டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், டாப் கன் படத்திலும் ஒரு பெரிய மிஷன் இம்பாசிபிள் கதையை வைத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஜோசப் கொசின்ஸ்கி.
மலைகளுக்கு நடுவே ரேடாரில் சிக்காமல் தரையை தொடும் வண்ணம் ஃபைட்டர் ஜெட் விமானத்தை தனது இளம் படையுடன் இயக்கி ஆயுதக் கிடங்கை நெருங்கும் காட்சி அபாரம்.
அங்கே இவரது விமானம் சுட்டு வீழ்த்தப்படும் நிலையில், என்ன ஆகிறது என்பதை காட்சிகளின் வழியே கடத்தி இருப்பது ரசிகர்களை சீட் எட்ஜுக்கே கொண்டு வந்து விடும்.
வரும் ஜூலை 3ம் தேதி வந்தால் டாம் க்ரூஸுக்கு 60 வயதாகிறது. இந்த வயதிலும் செம ஃபிட்டாக 40 வயது விமானி ஓட்டி என்று சொன்னால் நம்பும்படியாக அவரது தோற்றம் இருப்பதே பெரிய பிளஸ்.
ரியல் ஸ்டன்ட் காட்சிகளுக்கு பெயர் போன டாம் க்ரூஸ் டாப் கன் படத்திலும் ஏகப்பட்ட ரியல் ஸ்டன்ட்டுகளை செய்துள்ளார். கேமரா இயக்கம் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பு.
அட்டகாசமான ஆரம்பத்துடன் தொடங்கும் டாப் கன் மேவரிக் படம் ஒவ்வொரு நிமிடமும் ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன், பரபரக்கும் காட்சிகளுடன் நிறைந்துள்ளது.
கடைசி 20 நிமிட கிளைமேக்ஸ் காட்சியில் எதிரிகளிடம் இருந்த ஒரு ஓட்டை விமானத்தை எடுத்துக் கொண்டு தனது நண்பனின் மகனையும் காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் வெறித்தனம்.
பழைய நினைவுகளை டாம் க்ரூஸ் நினைத்துப் பார்க்கும் சில காட்சிகள் மட்டுமே மெல்ல நகரும். தியேட்டரில் படம் வந்தால் தாராளமாக டாம் க்ரூஸ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்க்கலாம்.