Tap to Read ➤

மீண்டும் களத்தில் இறங்கிய வடிவேலு...

திரையுலகை கலக்கிய மீம்ஸ் நாயகன் வைகைப்புயல் வடிவேலு இடையில் பல ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் போன்ற படங்களில் கலக்க வருகிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதய்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் தயாராகி வருகிறது
திரையுலகை விட்டு முற்றிலும் ஒதுங்கி இருந்த வைகைப்புயல் இதில் மாரிசெல்வராஜுடன் இணைகிறார்
வடிவேலு எலி படத்தில் கதாநாயகனாக நடித்தப்பின் மெர்சல், கத்திச்சண்டை போன்ற படங்களில் நடித்தாலும் பெரிதாக பேசப்படவில்லை
தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்
பரியேறும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் மாரி செல்வராஜ் பெரிதும் பேசப்பட்டார்.
அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படமும் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது வடிவேலுவுடன் இணைகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷுடன் வடிவேலு நடிக்க உள்ளார்.
வடிவேலு வேகமாக களத்தில் குதித்துள்ள நிலையில் மாமன்னன் படம் பல பிரபலங்களின் சங்கமமாக ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாவது இன்னிங்க்சில் வடிவேலு பழைய ஃபார்முக்கு வரணும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு