Tap to Read ➤

வாரிசு படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது, இதனை பற்றிய முழு விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
வாரிசு - இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் குடும்பத் திரைப்படம்.
வாரிசு திரைப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும்.
வாரிசு படத்தினை பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ் / தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் அனைவரும் கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள குடும்பத் திரைப்படமாகும், வாரிசு.
வாரிசு படத்தின் பூஜை 2022 ஏப்ரல் 6ல் சென்னையில் நடந்துள்ளது
வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 ஜூன் 21ல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சார்பில் இணையதள சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியானது.
படத்தின் புகைப்படங்கள்
புகைப்படங்கள்