Tap to Read ➤

ரஜினிக்கு ஒரு முள்ளும் மலரும், சிவாஜிக்கு தங்கப்பதக்கம்...வித்தியாச இய

ரஜினியை வைத்து வித்தியாசமான படங்களை அளித்த லெஜண்ட் இயக்குநர் மஹேந்திரனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வித்தியாசமாக வடிவமைத்தவர் இயக்குநர் மகேந்திரன். இன்று அவரது 3 ஆம் ஆண்டு நினைவு தினம்.
உன்னை இயக்கியவர்களில் உனக்கு பிடித்த இயக்குநர் யார் என்று பாலச்சந்தர் கேட்டபோது சட்டென்று ரஜினி சொன்ன பெயர் மகேந்திரன். இத்தனைக்கும் 4 படம் மட்டுமே இயக்கினார்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆக்‌ஷன் படங்கள் கொடுத்தாலும் வித்தியாசமான பாத்திரத்தை ரஜினிக்கு அளித்து பேச வைத்தவர் மகேந்திரன்
காவல்துறை என்றாலே தங்கப்பதக்கம் படம் என்று பேசப்படும் வித்தியாசமான கதையை சிவாஜிக்காக உருவாக்கியவர் மகேந்திரன்.
‘கெட்டப்பய சார் இந்த காளி’ ஒரு கை இல்லாத கதாநாயகன் பேசும் காட்சியை ரஜினிக்கு அமைக்க யாருக்கு துணிச்சல் வரும். அந்த நேரத்தில் கதாநாயக அந்தஸ்த்தை நோக்கி நகரும் நிலையில் உள்ள ரஜினிக்கு அந்தப்பாத்திரம் இதுவரை இல்லாத வெற்றியை தந்தது.
சிவாஜிக்கு ஒரு பாசமலர் என்றால் ரஜினிக்கு முள்ளும் மலரும். கிராமத்து முரட்டு இளைஞன் என ரஜினியை ஒவ்வொரு அணுவிலும் நடிக்க வைத்திருப்பார். முள் ரஜினி, மலர் ஷோபா அதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் பாலு மகேந்திரன்.
ரஜினி அதன் பின்னர் பல படங்கள் நடித்தாலும் முள்ளும் மலரும் அவரது குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாக இருக்கிறது.
நெஞ்சத்தை கிள்ளாதே படம் மூலம் தேசிய விருது பெற்றார். உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுகள், கைகொடுக்கும் கை போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
மாணவராக இருந்தபோது மேடையில் மகேந்திரன் பேசிய பேச்சைக் கேட்டு எம்ஜிஆர் அவரை திரைத்துறைக்கு அழைத்தார். காஞ்சித்தலைவன் படத்தில் உதவி இயக்குநராக மகேந்திரன் பணியாற்றினார்.
தனது வாழ்நாள் கனவான பொன்னியின் செல்வன் படத்தை எழுதச் சொல்லி மகேந்திரனை எம்ஜிஆர் கேட்டுக்கொண்டார். மகேந்திரன் திரைக்கதை, வசனம் வரை தயார் செய்து வைத்திருந்தும் முடியாமல் போனது.
அதேபோல் எம்.ஜி.ஆர் நாடகக்குழுவுக்காக நாடகம் ஒன்றை எழுதித்தந்தார். துக்ளக் பத்திரிக்கையில் கட்டுரையும் எழுதியுள்ளார். பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
சிவாஜிகணேசனுக்கும், காவல்துறைக்கும் பெருமைச் சேர்த்தப்படம் தங்கப்பதக்கம். போலீஸார் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தங்கப்பதக்கம் சிவாஜி கணேசனை ஆதர்ச நாயகனாக மாற்றியவர் மகேந்திரன்.
வசனங்களும், காட்சி அமைப்பும் இன்றைய இளம் இயக்குனர்களுக்கு பாடம் எடுக்கும் விஷயமாக இருக்கும். சினிமாவில் தேவையற்ற விஷயங்களை வெறுத்தவர், தவிர்த்தவர் மகேந்திரன். அதனால்தான் அவரது படங்கள் காலங்கடந்து நிற்கிறது.
தான் இறப்பதற்கு முன் சில படங்களில் மகேந்திரன் நடித்திருந்தார். அதில் குறிப்பிட வேண்டிய படங்கள் விஜய்யுடன் தெறி, ரஜினியுடன் பேட்ட போன்றவை ஆகும்.
தெறி படத்தில் அவரது நடிப்பை பார்த்தவர்கள் ரஜினி ஸ்டைல் போல் உள்ளதே என்று சொன்னார்கள். அவர்களுக்கு தெரியாது 1978 ல் ரஜினியை அந்த ஸ்டைலில் நடிக்க வைத்தவரே மகேந்திரன் தான் என்று.