Tap to Read ➤

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியானது

இன்று மே 02-2022, பீஸ்ட் திரைப்படத்தின் ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் படக்குழு சார்பில் இணையத்தில் வெளியானது.
Sakthi Harinath M
நடிகர் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், ரிடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க, இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் பாடல்களாக பிரபலமாகியுள்ள நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' பாடலை பாடலாசிரியர்
கு கார்த்தி எழுத, நடிகர் விஜய் பாடியுள்ளார்.
படத்தின் தகவல்கள்

Your browser doesn't support HTML5 video.

வீடியோ பாடல்