Tap to Read ➤

ஜாலி யோ ஜிம்கானா ஜெயிக்குமா? ?

vijay's jalli yo gymkana second single release
தமிழ் திரையுலகில் முன்னனி இடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு படமும் ரசிகர்களுக்கு விருந்துதான்.
விஜய் நடிப்பில் அடுத்து வர உள்ள படம் பீஸ்ட் படம் இப்படம் பெருத்த எதிர்பார்ப்பை தந்துள்ளது.
சமீபத்தில் பீஸ்ட் பட அரபி குத்து பாடல் வெளியானது. சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையில் பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. இதுவரை 192 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தை முடித்து அடுத்து ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார்.
நெல்சன் திலீப் குமார், லோகேஷ் கனகராஜ் இருவரும் நண்பர்கள் சமீபத்தில் லோகேஷ் பிறந்த நாளுக்கு நெல்சன் வாழ்த்துச் சொல்ல எங்க மச்சி பீஸ்ட் அப்டேட் என லோகேஷ் கலாய்த்தார்.
பீஸ்ட் அப்டேட் உண்டா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் ஆடியோ லாஞ்ச இல்லை என்கிற முடிவு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் ஜாலிலோ ஜிம்கானா செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது என்று அறிவித்துள்ளனர்
இந்த பாடலில் என்ன விசேஷம் என்றால் இந்தப்பாடலை பாடியது விஜய் என்பதுதான்
நாளை வெளியாகும் ஜாலிலோ ஜிம்கானா செகண்ட் சிங்கிள் சாங் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஜாலி யோ ஜிம்கானா அதே பீஸ்ட் பட அரபிக்குத்து பாடலைப்போல் ஹிட் அடிக்குமா?