Tap to Read ➤

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன்

vijay sethupathi -seenu ramasamy join after dharmadurai movie
தர்மதுரை படத்துக்குப்பின் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் மாமனிதன்,
படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
விஜய் சேதுபதிக்கு பெயர் வாங்கிக்கொடுத்த தர்மதுரை படத்தை இயக்கியவர் சீனுராமசமி. அவர் அடுத்து இயக்கும் படம் மாமனிதன்.
மாமனிதன் பார்த்துவிட்டு நடு ராத்திரி 3 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைத்து படத்தின் அத்தனை அம்சங்களையும் அலசி பாராட்டியதாக சீனு ராமசாமி தெரிவித்தார்.
இந்தப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். அவரது தந்தையுடன் சேர்ந்து படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன். கொரோனா லாக்டவுன் காரணமாக படம் 2 ஆண்டுகள் தள்ளிப்போனது.
படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுநராக நடித்துள்ளார். அவரது பிள்ளைகளுக்காக கஷ்டப்படும் பாத்திரம்.
அழகான குடும்பம். மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டும் விஜய் சேதுபதி ஊர் மக்களுக்காக சமூக சேவையில் ஈடுபடுகிறார்.
இதை பிடிக்காத மனைவி விஜய்சேதுபதியை கண்டிக்கிறார். ஆனாலும் அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.
இதனால் அவர் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். ஊரில் சிலர் எதிர்ப்பாக கிளம்ப விஷயம் போலீஸ் வரை செல்கிறது.
விஜய் சேதுபதி தலைமறைவாகிறார். கேரளா செல்கிறார். பிள்ளைகள் குடும்பம் கஷ்டப்படுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் விஜய்சேதுபதி காசி செல்வதாக காண்பிக்கிறார்கள், அகோரிகளுடன் இருப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் , பாடல்களில் உள்ள காட்சிகள் கதையை இவ்வாறு உணர்த்துகின்றன. முழுப்படமும் வெளியானால் கதை தெளிவாக தெரியவரும். மாமன்னன் விஜய் சேதுபதிக்கு ஒரு மைல் கல்லாக அமையவும் வாய்ப்புள்ளது.