Tap to Read ➤

விக்ரம் - 400 கோடி வசூலுடன் திரையரங்கில் 25வது நாள் கொண்டாட்டம்

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம், இன்றுடன் 25 நாட்கள் நிறைவேறி இந்த ஆண்டின் பிரமாண்ட ஹிட் படமாக அவதரித்துள்ளது. முழு தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம்
விக்ரம்
விக்ரம் படத்தினை நடிகர் கமல் தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் இந்த ஆண்டு ஹிட் ஆல்பம் பாடலாக விக்ரம் திரைப்படம் பிரபலமாகியுள்ளது.
விக்ரம் திரைப்படம் 2022, ஜூன் 03ல் உலகெங்கும் வெளியான நிலையில், இன்றுடன் இப்படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ளது.
1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவும், 2019ஆம் ஆண்டு வெளியான கைதி படத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது.
இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக திரையிடப்படும், விக்ரம் படம் சுமார் 400 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
2017ஆம் ஆண்டு வெளியாகி தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக புகழ் பெற்ற 'பாகுபலி 2' படத்தின் வசூலை 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளது.
விக்ரம் தகவல்கள்