Tap to Read ➤

விக்ரம் படத்தின் புதிய சாதனை - தமிழகத்தில் மட்டும் ₹100 கோடிகள் வசூல்

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ₹100 கோடிகள் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது, இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.
லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசனின் முன்னனி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான், விக்ரம்.
விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பிரமாண்ட ஹிட் அடித்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் ₹100 கோடிகள் வசூல் செய்துள்ள படங்களின் பட்டியலில் விக்ரம் படம் 3வது படமாக இடம் பெற்றுள்ளது.
வலிமை, கே ஜி எஃப் 2 படங்களுக்கு பின்னர் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் ₹100 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
உலகளவில் விக்ரம் திரைப்படம் ₹250 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் விக்ரம் திரைப்படம் தான் இந்த ஆண்டின் ₹250 கோடிகள் வசூல் செய்து அதிக வசூல் செய்துள்ள படமாக தற்போது முதலிடத்தில் உள்ளது
விக்ரம் படத்தின் தகவல்கள்
தகவல்கள்