Tap to Read ➤

விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் படம் நாளை ரிலீஸாகிறது

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் முற்றிலும் வித்தியாசமான போலீஸ் பயிற்சி கல்லூரி பின்னனியில் உருவான டாணாக்காரன் படம் நாளை வெளியாகிறது. வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய தமிழ் படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.
முதன் முதலில் கும்கி படம் மூலம் விக்ரம் பிரபு அறிமுகமானார். அந்தப்படம் சிறப்பாக ஓடியது. முதல் படத்திலேயே விக்ரம் பிரபு அசத்தியிருந்தார்.
காதல், சஸ்பென்ஸ், கிரைம் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. நடிப்புக்காக உடலை வருத்தவும் தயாராக இருக்கிறார்.
இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, சத்ரியன், அசுர குரு, போன்ற படங்கள் அவரது பேர் சொல்லும் படங்கள் ஆகும்.
விக்ரம் பிரபு படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்க்கும் வகையில் வன்முறை காட்சிகள் இன்றி இருக்கும்.
விக்ரம் பிரபு தற்போது பொன்னியின் செல்வன், பகையே காத்திரு, பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் அவர் நடித்துள்ள டாணாக்காரன் நாளை ஓடிடி தளத்தில் Disney Hotstar-ல் வெளியாகிறது.
இந்தப்படம் போலீஸ் ட்ரெய்னிங் கல்லூரியில் நடக்கும் கதையை அடிப்படையாக கொண்டது.
போலீஸ் ட்ரெய்னிங்கில் நடக்கும் சம்பவங்களை நிஜ போலீஸாக இருந்து திரைத்துறைக்கு வந்த தமிழ் இயக்கியுள்ளார்.
இவர் வெற்றிமாறனிடம் விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
ஜெய்பீம் படத்தில் கொடூர எஸ்.ஐ ஆக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இயல்புக்கு பெயர் போன வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றியதால் தமிழ் இயக்கத்தில் வரவுள்ளடாணாக்காரன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.