Tap to Read ➤

இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

கொரோனா லாக்டவுனுக்கு பின் திரையரங்குகளில் படங்கள் அதிக அளவில் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் நவ.25 நாளை வெளியாகும் படங்களை பார்ப்போம்.
Filmibeat Tamil
ஏஜெண்ட் கண்ணாயிரம், சந்தானம் நடிப்பில் நாளை வெளியாகும் திரைப்படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ரியா சுமன், ஷ்ருதி ஹரிஹரன், ரெடின் கிங்க்ஸ்லி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் டிடெக்டிவ் ட்ராமாவாக உருவாகியுள்ளது.
பட்டத்து அரசன்: அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பட்டத்து இளவரசன்’. ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஆர்கே சுரேஷ், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிராமத்துக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
காரி: சசிகுமார் கதாநாயகனாக நடித்த படத்தில் பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். நாளை திரைக்கு வருகிறது.
பவுடர்: நிகில் முருகன், வித்யா பிரதீப், சாந்தினி தேவா, விஜய் ஸ்ரீ ஜி, மொட்ட ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ள நகைச்சுவைப் படம். இந்த படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.
கெத்துல : ஸ்ரீஜித் கதாநாயகனாகவும், ஏரின் அதிகாரி, ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்டோர் நடித்துள்ள படம். இது ஒரு ஆக்‌ஷன் படம். தமிழில் வெளியாகியுள்ள இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது.
பேடியா : வருண் தவான், கிரிடி சனம் உள்ளிட்டோர் நடித்த படம். இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாகும் பான் இந்தியா படம் இது நாளை திரைக்கு வருகிறது. இது காமெடி கலந்து த்ரில்லர் படம்.
கிலா ஐலேண்ட்: 'கைலாஷ் நாயகனாகவும், இந்திரன், ஸ்ரியாஸ்ரீ உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளில் நாளை திரையரங்கில் வெளியாகிறது. த்ரில்லர் படமாக வெளிவந்துள்ளது.
இது தவிர மலையாளத்தில் காமெடி கலந்த த்ரில்லர் படம் லூயிஸ் நாளை திரையரங்கில் வெளியாகிறது. இதில் இந்திரன், மனோஜ் கே ஜெயன், சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இது தவிர லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. கோமாளி பட இயக்குநரே படத்தின் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இது தவிர நித்தம் ஒரு வானம் படமும் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் அஷோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ளார்.
உதயநிதி நடித்த ’கலகத் தலைவன்’ படம் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.