Tap to Read ➤

சனி, ஞாயிறு ஓடிடி/திரையரங்கில் என்ன படம் பார்க்கலாம்..இந்த வார வரவுகள்

சனி, ஞாயிறு விடுமுறை தினத்தில் திரையரங்கில் புதிய வரவுகளை ஷாப்பிங் செய்தபடி, ஓடிடி வரவுகளை வீட்டில் ஸ்நாக்ஸ் கொரித்தப்படி பார்க்க புது வரவுகள் இதோ.
Filmibeat Tamil
உதயநிதி நடிப்பில் கலகத் தலைவன் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வின்னர் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார்.
சசிகுமார் நடிப்பில் ‘மிருகமாய் மாற’ இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். திரை அரங்கில் வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகை ஹரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார்.
நடிகர் கதிர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியுள்ள படம் ‘யூகி’ ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், நரேன், நட்டி, கயல் ஆனந்தி நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். வாடகைத்தாய் பிரச்சினையை அலசுகிறது.
’செஞ்சி’ வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையாக உருவாகி உள்ள திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் நடித்த இப்படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான கணேஷ் சந்திரசேகர் இயக்கியுள்ளார்.
திரிஷ்யம்-2 மலையாளப்படத்தின் தழுவலாக இந்தியில் அஜய்தேவ்கான் நடிப்பில் த்ரிஷ்யம்- 2 திரையில் இந்தியில் ரிமேக் ஆகி திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதில், தபு, அக்ஷய் கன்னா, இனிதா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
’விவாஹ ஆவஹணம்’ (மலையாளம்) சாஜன் ஆலும் மூட்டில் இயக்கியுள்ளார். இப்படத்தில், அஜு வர்கீஸ், சந்தோஷ் கீழத்தூர், ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத் திரைப்படமான இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
அனல் மேலே பனித்துளி’ நடிகை ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார். பாலியல் பலாத்கார பாதிப்புக்கு ஆளாகி தவிக்கும் பெண்ணாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஒண்டர் உமன் பார்வதி, நித்யா மேனன், நதியா, பத்மபிரியா உள்ளிட்டோர் நடிப்பில் ஒண்டர் உமன் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கி இருக்கிறார்.
காந்தாரா’ ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.
சர்தார் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்தி நடிகர் சங்கி பாண்டே ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
’’காட் ஃபாதர்’ மோகன்லால் நடித்த லூசிஃபயர் படத்தின் தழுவல் காட்ஃபாதர். சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் நேற்று வெளியானது.
1889 சீரிஸ் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது இது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆஹா நா பெல்லண்டா பான் இந்தியா மூவி. காமெடி படம் இது ஜி.5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழிலும் பார்க்கலாம்.
#RIPD2 ஆங்கிலப்படம், காமெடி கலந்த படம். ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.
#ChristmasWithYou ஆங்கிலப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. ஆடல், பாடல், இசைப்பிரியர்களுக்காக.
குமாரி மலையாளப்படம். பொன்னியின் செல்வன் பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம். ஹாரர் வகை படம் ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகியுள்ளது.
”ஸ்ரீ தான்யா கேட்டரிங் சர்வீஸ்” மலையாள மொழி படம், அரசியல் நகைச்சுவை கலந்து வெளியாகியுள்ள படம்.
’பத்மா’ மலையாளப்படம். உளவியலாளர் ரவிசங்கர், அவரது மனைவி பத்மஜா மற்றும் அவரது வாடிக்கையாளர்களுடன் நடக்கும் கூத்துகளை நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர். இப்படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.