Tap to Read ➤

பாபா ரீ-ரிலீஸ் வெற்றி பெறுமா?.. ரஜினிக்கு நினைப்பது நடக்குமா?

பாபா படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அந்த நேரத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள், பிற காரணங்களால் படம் தோல்வி அடைந்தது. மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
Filmibeat Tamil
ரஜினியின் வித்தியாசமான தோற்றத்துடன் பாபா படம் அவரது சொந்த தயாரிப்பாக 2002-ம் ஆண்டு வெளியானது
ரஜினிகாந்த் 2009 ஆம் ஆண்டு படையப்பா என்கிற படத்தில் நடித்தார். அது சிறப்பாக ஓடியது. அதில் சில அரசியல் கருத்துகளை ரஜினி தெரிவித்திருந்தார்
அதன்பின்னர் 3 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் சொந்தமாக திரைக்கதை எழுதி சொந்தமாக தயாரித்த படம் பாபா
இந்தப்படத்தில் சிக்ரெட், மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் எதிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது
பல்வேறு காரணங்களால் படம் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் ரஜினி தனது தோற்றத்தை முழுக்க மாற்றிக்கொண்டு சந்திரமுகி படத்தில் நடித்தார்
அதன் பின்னர் பல வெற்றிப் படங்களை ரஜினி கொடுத்தாலும் பாபாவின் தோல்வி அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. இந்நிலையில் ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார் ரஜினி
பாபா ரீ.ரிலீஸுக்கான போஸ்ட் பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில மாற்றங்கள் செய்கிறார். ரஜினியும் டப்பிங் பேசியுள்ளார்
புதிய பொலிவுடன் டிச.12 ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் பாபா வெற்றி பெறுமா ரஜினியின் எண்ணம் நிறைவேறுமா? முடிவு ரசிகர்கள் கையில்