Tap to Read ➤

வாசலில் உன் காலணி..நீ எங்கே? தூரிகையை நினைத்து உருகும் கவிஞர் கபிலன்

மகளை நினைத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார் கபிலன்.
Filmibeat Tamil
எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால்.. நான் எப்படி தூங்குவேன்..
எங்கே போனாள் என்று தெரியவில்லை..அவள் காலனி மட்டும் என் வாசலில்..
மின்விசிறி காற்று வாங்குவதற்கா? உயிரை வாங்குவதற்கா..?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்..
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா, எனக்கு தெரியாது அவளை என் கடவுள்..
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது..
கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி..
யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பியிருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு..
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்