twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகான கதை.. அதிரடி டிவிஸ்ட்.. தில் பெச்சாரா படம் குறித்து இளம் விமர்சகர் அஷ்வினின் அசத்தல் ரிவ்யூ!

    |

    சென்னை: சுஷாந்த் சிங்கின் கடைசி படமான தில் பெச்சாரா படம் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் அசத்தல் ரிவ்யூ கொடுத்துள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.

    தோனியை போன்ற தத்ரூபமான நடிப்பால் தோனி ரசிகர்களையும் தன்னுடைய ரசிகராக்கினார். இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     சுஷாந்தால் பாலிவுட்டில் பிரபலமான தமிழ் வார்த்தை சுஷாந்தால் பாலிவுட்டில் பிரபலமான தமிழ் வார்த்தை "சரி".. டிவிட்டரிலும் ட்ரெண்டிங்!

    தில் பெச்சாரா

    தில் பெச்சாரா

    அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பெச்சாரா படம் நேற்று இரவு ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    இன்ச் பை இன்ச்சாக

    இன்ச் பை இன்ச்சாக

    இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் சுஷாந்தின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இளம் விமர்சகரான அஷ்வின் தில் பெச்சாரா படம் குறித்து இன்ச் பை இன்ச்சாக ரிவ்யூ கொடுத்துள்ளார். தில் பெச்சாரா படம் அழகான காதல் கதை என்றும் படம் முழுக்க பல அதிரடி திருப்பங்கள் உள்ளன என்று கூறியிருக்கிறார்.

    மரணத்தின் விளிம்பில்

    மரணத்தின் விளிம்பில்

    கேன்சரால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் இருவரின் வாழ்க்கையை இயல்பாக காட்டியிருக்கிறார்கள். கேன்சரை அறிந்து சோகத்தில் இருக்கும் ஹீரோயினை சந்தோஷப்படுத்தும் ஹீரோவாக சுஷாந்தின் நடிப்பு சிறப்பு. சுஷாந்த் சிங்கின் நண்பருக்கும் ஒரு குறை இருக்கும். அவருக்கும் கண்களில் கேன்சர்.

    100 நாட்களை தாண்டி..

    100 நாட்களை தாண்டி..

    எல்லோருடைய நடிப்புமே அற்புதம். சுஷாந்த் நீங்க ஒரு நல்ல மெட்டீரியல். தியேட்டரில் இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்தால் நிச்சயமாக 100 நாட்களை தாண்டிதான் ஓடி இருக்கும். படத்தின் லொகேஷன், காட்சிப்படுத்தப்பட்ட விதம் என எல்லாமே அசத்தலாக உள்ளது.

    படத்திற்கு பக்கபலம்

    படத்திற்கு பக்கபலம்

    ஏஆர் ரஹ்மான் இன்வால்வ் ஆகிறார் என்றாலே கதை நல்லாதானே இருக்கும். இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக பாரிஸில் இடம்பெறும் டூயட் பாடல் அருமை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை இசை ரொம்பவே பக்கபலமா உள்ளது.

    ரசிகர்களுக்கு ட்ரீட்

    ரசிகர்களுக்கு ட்ரீட்

    அபிமன்யூ வீராக ஒரு காட்சியில் வரும் சைஃப் அலிகான் நடிப்பும் அட்டகாசம். பல திருப்பங்கள் படத்தில் உள்ளன. எதிர்பார்க்காத நிலையில் சுஷாந்த் சிங் படத்திலும் இறந்து விடுவார். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அருமையான படம். நிச்சயம் சுஷாந்தின் ரசிகர்களுக்கு இந்தப் படம் ட்ரீட்டாகதான் இருக்கும்.

    ஆன்மா சந்தோஷப்படும்

    சுஷாந்த் நம்முடன் இல்லை என்பதை இந்தப் படம் நினைவுப்படுத்தி உள்ளது. ஆனால் சுஷாந்த் நம்முடன் தான் உள்ளார். சுஷாந்த் உங்கள் ஆன்மா இந்தப் படத்தை பார்த்தால் சந்தோஷப்படும். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என முடித்துள்ளார் அஷ்வின்.

    English summary
    A young reviewer Ashwin speaks about Dil Bechara movie. He says Such a beautiful love story, This will be a treat for Sushanth fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X