'நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கு' சகுந்தலா தேவி குறித்து இளம் விமர்சகர் அஷ்வின் கலக்கல் ரிவ்யூ!
சென்னை: வித்யா பாலன் நடிப்பில் வெளியான சகுந்தலா தேவி படம் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் கலக்கல் ரிவ்யூ கொடுத்துள்ளார்.
நடிகை வித்யா பாலன் பாலோ தேக்கோ என்ற பெங்காலி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற வித்யா பாலன், இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டார். இதன் மூலம் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில்க் ஸ்மிதா
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படமான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்தார் நடிகை வித்யா பாலன். அந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

நேர்கொண்ட பார்வை
வித்யா பாலனின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் வித்யா பாலன். தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் வித்யா பாலன், கடைசியாக தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

சகுந்தலா தேவி
இந்நிலையில் அவர் நடித்த சகுந்தலா தேவி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமான இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமேசான் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆனது.

இளம் விமர்சகர்
படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் உள்ளது என பாஸிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளம் யூ டியூப் விமர்சகரான அஷ்வின், சகுந்தலா தேவி படம் குறித்த தனது விமர்சன வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வாழ்ந்துள்ளார்
அதில் வித்யா பாலனின் வெர்சடைல் சினிமா ட்ராவல் குறித்து பேசியுள்ள அவர், சகுந்தலா தேவி படம் குறித்தும் விரிவாக விமர்சித்துள்ளார். இதுபோன்ற கேரக்டர்களை எடுத்து நடிக்க ஒரு துணிச்சல் வேண்டும் என்று கூறியுள்ள அஷ்வின், வித்யாபாலன் சகுந்தலா தேவியாகவே வாழ்ந்துள்ளார் என கூறியுள்ளார்.
படம் பார்த்த திருப்தி
மேலும் இந்தப் படத்தின் மூலம் படம் பார்த்த ஓர் திருப்தி இருப்பதாக கூறியுள்ள அஷ்வின், இந்தப் படத்தை பார்த்த பிறகு சகுந்தலா தேவி இப்படிதான் இருந்துள்ளார் என கண் முன்னே காட்டுவதாகவும் கூறியுள்ளார். சகுந்தலா தேவி இப்போது உயிரோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் இந்தப் படத்தின் மூலம் அவரை காண முடிகிறது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











