மாரி பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்?

சென்னை : நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கிவரும் தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

ஹாலிவுட்டில் அதிரடியாக களம் இறங்கியிருக்கும் தனுஷ் இப்பொழுது அவெஞ்சர்ஸ்: தி எண்டு கேம் படக்குழுவின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் தனுஷ் அதைத்தொடர்ந்து மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மாரி

மாரி

தனுஷ் முன்னணி இயக்குனர்கள் மட்டுமல்லாமல் இளம் இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றி அனைத்து விதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு ஒவ்வொரு படத்தின் மூலமும் புது அனுபவத்தை கொடுத்து வருகிறார். அந்தவகையில் குறும்பட இயக்குனராக இருந்து இப்பொழுது தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வெற்றி வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி திரைப்படத்தில் தனுஷ் இணைந்து நடித்திருந்தார்.

கேரளாவில் மாபெரும் வெற்றி

கேரளாவில் மாபெரும் வெற்றி

வடசென்னை ரவுடி கதாபாத்திரத்தில் அராத்து செய்து முதன்முறையாக தனுஷ் நடித்திருந்த மாரி திரைப்படம் தமிழகத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றதோ அதை விட இரு மடங்கு கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவரும் மாரியின் கெட்டப் மற்றும் கதாபாத்திரத்தை பெருமளவு கொண்டாடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதிக பார்வையாளர்களை

அதிக பார்வையாளர்களை

மாரியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியாக இந்த முறை மலையாள ரசிகர்களையும் கவரும் வகையில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மற்றும் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
முதல் பாகத்தை விடவும் இது சுமாரான வெற்றியை பெற்றிருந்தாலும் இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்று இணையதளத்தை இன்றளவும் கலக்கி வருகிறது . அதிக பார்வையாளர்களை கொண்ட இந்திய பாடல் என்ற பெருமையையும் ரவுடி பேபி பெற்றுள்ளது.

ஓகே சொல்லி

ஓகே சொல்லி

இவ்வாறு பாலாஜி மோகன் மற்றும் தனுஷ் கூட்டணி என்றாலே தனிச்சிறப்பு பெற்றிருக்க ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்த கூட்டணி இப்பொழுது மீண்டும் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தனுஷ் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்க, அதைத்தொடர்ந்து டி43, தி கிரே மேன், செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 மற்றும் நானே வருவேன் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் அதற்கு அடுத்தபடியாக பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் பாலாஜி மோகன் தனுஷை சந்தித்து கதை கூறியிருக்க மிகவும் பிடித்துப் போன காரணத்தால் உடனடியாக ஓகே சொல்லி உள்ளாராம். இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவிலேயே வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X