ரீல் இல்ல ரியல்..இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..கார்த்திகை தீபம் சீரியலை ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்!

சென்னை: நேற்றைய எபிசோடில், தீபா, கார்த்திக் காதல் கதையை கீதா படித்துக்கொண்டு இருக்கிறாள். இதில் ஹனிமூன் சென்ற இடத்தில், தீபாவை பாம்பு கடித்துவிட, சாதாரண பாம்பு தான் விஷப்பாம்பு இல்லை, பயப்பட வேண்டியது இல்லை, இருந்தாலும் இந்த நேரத்தில் நைட்டு மட்டும் தூங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.

இதனால் கார்த்திக் நாம ரூமுக்குள்ள இருக்க வேண்டாம் என்று சொல்லி தீபாவை வெளியே அழைத்து வருகிறான். இந்த விஷயம், ஷூட்டிங்கிற்காக வந்து இருப்பவர்களுக்கு தெரியவர, தீபாவை தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நைட் எல்லாம் கூட்டு சேர்ந்து ஆட்டம் பாட்டம் என என்டர்டெயின்மென்ட் செய்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

zee tamil karthigai deepam

கார்த்திகை தீபம்: இன்றை எபிசோடில், அடுத்த நாள் காலையில் தீபா மற்றும் கார்த்திக் இருவரும் ரிசார்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்ப இன்னொரு பக்கம் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் போலி துப்பாக்கிக்கு பதில் ரியல் துப்பாக்கி மாறியது தெரியாமல் ஷூட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். ஹீரோயினுக்கு டயலாக் பேச வராத காரணத்தால் டைரக்டர் கார்த்தியிடம் உதவி கேட்க கார்த்திக் வந்து ஹீரோயினுக்கு டயலாக்கை சொல்லி கொடுக்கிறான்.

ரீல் துப்பாக்கி இல்ல ரியல் துப்பாக்கி:மறுபக்கம், தீபா ரிசப்ஷனில் காத்துக் கொண்டிருக்க அப்போது ஷூட்டிங்கிற்கு துப்பாக்கியை கொடுத்த நிறுவனத்திடம் இருந்து போன் வருகிறது. ரிசப்ஷனில் யாரும் இல்லாததால், தீபா அந்த போனை எடுக்கிறாள். அதில், ஷூட்டிங்கிற்கு கொடுத்த துப்பாக்கி போலி இல்லை, தவறுதலாக ரியல் துப்பாக்கியை கொடுத்து விட்டதாக சொல்ல இந்த விஷயம் தெரிந்த தீபா விஷயத்தை சொல்ல ஓடி வருகிறாள்.

நன்றி சொன்ன இயக்குநர்: நீளமான டயலாக் பேசிய ஹீரோயின் துப்பாக்கியை எடுத்து சுட போகும் போது ஓடிவந்த தீபா, விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி ஷூட்டிங்கை நிறுத்துகின்றனர். அதன் பிறகு டைரக்டர் துப்பாக்கியை எடுத்து பார்த்து உண்மை துப்பாக்கி என தெரிந்ததும் தீபாவிற்கு நன்றி சொல்கிறார். இதையடுத்து, கார்த்திக் மற்றும் தீபா ரிசார்ட்டில் இருந்து கிளம்பி விடுகின்றனர்.

கவலையில் கீதா: இந்த விஷயத்தை தீபா டைரியில் எழுதி வைத்து இருக்கிறாள். இதைப்படித்த கீதா, தீபா கார்த்தியை எப்படி எல்லாம் காதலித்து இருக்காங்க, அதே போல கார்த்திக்கும் தீபாவை மனப்பூர்வமா காதலிக்கிறார். இவங்க ரெண்டு பேரும் சீக்கிரம் சேர வேண்டும்,கூடிய சீக்கிரம் தீபா திரும்பி வரணும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறாள். கடந்த ஒரு மாதமாக தீபா, கார்த்திக் எப்போது சேருவார்கள் ஆவளோடு சீரியலை பார்த்துக்கொண்டு இருந்தோம். ஆனால் கடைசியில், டிஆர்பிக்காக இப்படி ஒரு லவ் ட்ராக்கான என ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X