பாரதி கண்ட புதுமை பெண் இதுவல்ல.. மகா கவியை மட்டப்படுத்துகிறாரா பலூன் அக்கா அரோரா?

சென்னை: யூடியூப் மூலம் பிரபலமாகி; பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொண்டவர் அரோரா. நெட்டிசன்களால் பலூன் அக்கா என்ற அழைக்கப்படும் அவர்; அந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை பிடித்து அசத்தினார். இதனையடுத்து சில திரைப்படங்களில் நடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அணிந்திருக்கும் உடையில் மகா கவி பாரதியாரை அசிங்கப்படுத்திவிட்டதாக கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

தமிழ்நாட்டி லட்சக்கணக்கான யூடியூப் சேனல் இருக்கின்றன. பலர் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களாகவும் ஜொலிக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அரோரா. இணையவாசிகளாலும், அவராலும் பலூன் அக்கா என அழைக்கப்படுபவர். சோஷியல் மீடியாவில் அவர் பதிவேற்றும் வீடியோக்கள் ஆபாசமாக இருக்கின்ற என்ற சர்ச்சைகளும் எழுந்தது உண்டு. அவர் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் தனக்கான பிரபல்யத்தையும், ஃபாலோயர்ஸ்களையும் ஏற்றும் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினார்.

Bigg Boss Tamil 9 Fame Aurora Faces Backlash Over Bharathiyar Photo on Outfit
Photo Credit:

பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில்: அந்த கவனத்தின் பலனாக அவருக்கு ஃபாலோயர்ஸ் ஏற; ஏற தேவையான வெளிச்சமும் கிடைத்தது. அதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற அரோரா தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான விளையாட்டையே வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு ரசிகர்கள் வட்டமும் பெருகியது.

Also Read
அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?.. ரஜினி ஸ்டைலில் வந்த பதில்.. அது நடந்துவிடுமோ?
அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்?.. ரஜினி ஸ்டைலில் வந்த பதில்.. அது நடந்துவிடுமோ?

அடையாளத்தை மாற்ற நினைத்த அரோரா: குறிப்பாக தன் மீது விழுந்திருக்கும் விரும்பத்தகாத அடையாளத்தை அரோரா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அகற்றவும் ஆசைப்பட்டிருந்தார். இனிமேல் தன்னை பலூன் அக்கா என யாரும் அழைக்க வேண்டாம் எனவும் ஒருமுறை கேட்டுக்கொண்டிருந்தார். சக போட்டியாளர்களிடம் எவ்வளவு நேர்மையாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு நேர்மையாகவே நடந்துகொண்டார். அதிலும் விஜே பாருவும், கம்ருதீனும் சேர்ந்து சாட்ராவை எட்டி உதைத்து தள்ளிய விஷயத்தில் இவர் நியாயத்தின் பக்கமே நின்றார்.

நான்காவது இடம்: பிக்பாஸில் அவர் தொடர்ந்து சிறப்பான கேமை வெளிப்படுத்தியதால் அவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெடுவாய்ப்பாக அவருக்கு நான்காவது இடம் கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிப்பில் பிஸியாகியிருக்கிறாராம். விரைவில் அவர் கமிட்டான படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சர்ச்சையில் அரோரா: இந்நிலையில் அரோரா புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, அவர் சமீபத்தில் புடவை கட்டிக்கொண்டு ஃபோட்டோஷூட் நடத்தினார். அப்போது ஜாக்கெட்டின் முன்பகுதியில் மகா கவி பாரதியாரின் புகைப்படத்தை டிசைன் செய்து அணிந்திருந்தார். அதில் தமிழி எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருந்தன. இதை பார்த்த நெட்டிசன்களோ, பாரதியார் உருவத்தை ஏன் அந்த இடத்தில் வைக்க வேண்டும்; இதெல்லாம் வேண்டுமென்றே செய்கிறார் என்றும்; இப்படியெல்லாம் செய்வது பாரதி கண்ட புதுமை பெண் அல்ல; அது வேறு என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X