Oscars 2019: நாங்களும் வருவோம்- நடிகைகளுக்கு போட்டியாக கவுன் அணிந்து வந்த நடிகர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவுக்கு டக்சீடோ கவுன் அணிந்து வந்த நடிகர் பில்லி போர்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.
91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. ஆஸ்கர் விழா என்றாலே பிரபலங்கள் அழகு அழகாக உடை அணிந்து வருவார்கள்.
நடிகைகள் டிசைனர் கவுன்களில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் அழகே அழகு.
பில்லி போர்டர்
நடிகைகள் மட்டும் தான் கவுன் அணிய வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன?. ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் டக்சீடோ கவுன் அணிந்து வந்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார்.
பெருமை
பில்லி போர்டருக்கு கவுனை டிசனை செய்து கொடுத்த கிறிஸ்டியன் சிரியனோ ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பெருமிதம் கொண்டுள்ளார்.
பாராட்டு
பில்லி போர்டரின் கவுனை பார்த்து பிரபலங்கள் யாரும் கலாய்க்கவில்லை மாறாக பாராட்டியுள்ளனர்.
கிண்டல்
பில்லி போர்டரின் டக்சீடோ கவுனை பார்த்து அவர் பாதி தூக்கத்தில் இருப்பதாக கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











