Oscar Awards 2019: ஆஸ்கர் விழாவில் நம்ம ‘ஆஸ்கர் நாயகன்’ என்ன செய்றார் பாருங்க!
91வது ஆஸ்கர் விருதுகள் விழாவில் இந்தியாவின் ஆஸ்கர் நாயகனாக போற்றப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டே கலந்து கொண்டுள்ளனர்.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர்.

கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறிது நேரம் தொகுப்பாளராக செயல்பட்டவர் பிரியங்கா சோப்ரா என்பது நினைவு கூரத்தக்கது. இந்திய நடிகைகளில் இந்த கௌரவம் முதன் முதலாக பிரியங்கா சோப்ராவுக்கு தான் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலை வெளியிடும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் நடிகையாகவும் இருக்கிறார். ஹாலிவுட் நடிகையாக வளர்ந்ததன் மூலம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலை வெளியிடும் வாய்ப்பு அவ்ருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அங்கிருந்தபடி நேரடியாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்தியாவின் ஆஸ்கர் நாயகனாக போற்றப்படும் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 2009ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர்.


Click it and Unblock the Notifications











