ஸ்டூடியோ ஃபிளிக்ஸ் விருதுகள்...சிறந்த படம் ஜெய்பீம்
சென்னை : ஸ்டூடியோ ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் 2021 ம் ஆண்டிற்கான சினிமா விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 23 பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 9.30 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வில் 30 நிமிடங்களுக்கு ஒன்று என்ற விதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மாநாடு படம் 3 பிரிவுகளின் கீழும், ஜெய்பீம் 5 பிரிவுகளின் கீழும் விருதுகள் பெற்றுள்ளன. இந்த விருதுகளின் விபரங்களை இங்கே பார்க்கலாம்.

விருதுகள் முழு விபரம் :
- சிறந்த சவுண்ட் எடிட்டிங் - தாபஸ் நாயக் (லிஃப்ட்)
- சிறந்த ஆல்பம் - ஜிப்ரான் (மாறா)
- சிறந்த பின்னணி பாடகர் - சித் ஸ்ரீராம் (டெடி)
- சிறந்த பின்னணி பாடகி - வைகோம் விஜயலட்சுமி (ஜெய்பீம்)
- சிறந்த டிவி தொகுப்பாளர் (ஆண்) - அர்ஜுன் சர்ஜா
- சிறந்த டிவி தொகுப்பாளர் (பெண்) - பிரியங்கா தேஷ்பாண்டே
- சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - ஏகா லஹானி மற்றும் ரேயா அனுசுயா சுரேஷ் (மாறா)
- சிறந்த ஆர்ட் டைரக்டர் - அஜயன் சாலிஸரி (மாறா)
- சிறந்த ஒளிப்பதிவாளர் - எம்.சுகுமார் (தேன்)
- சிறந்த எடிட்டர் - பிரவீன் கேஎல் (மாநாடு)
- சிறந்த குழந்தை நட்சத்திரம் - பூவையார் (மாஸ்டர்)
- சிறந்த வசனம் - ஜெய்பீம்
- சிறந்த காமெடியன் - கிங்ஸ்லே (டாக்டர்)
- சிறந்த கதை - ஃபிராங்கிளின் ஜாகோப் (ரைட்டர்)
- சிறந்த துணை நடிகை - ஸ்ரீரஞ்சனி (வினோதய சித்தம்)
- சிறந்த துணை நடிகர் - மணிகண்டன் (ஜெய்பீம்)
- சிறந்த திரைக்கதை - வெங்கட் பிரபு (மாநாடு)
- சிறந்த வில்லன் - எஸ்.ஜே.சூர்யா (நெஞ்சம் மறப்பதில்லை)
- சிறந்த சண்டைப்பயிற்சி - அன்பறிவு (சார்பட்டா பரம்பரை)
- சிறந்த டைரக்டர் - வெங்கட் பிரபு (மாநாடு)
- சிறந்த படம் - ஜெய்பீம்
- சிறந்த நடிகர் - தனுஷ் (கர்ணன்)
- சிறந்த நடிகை - லிஜோமோல் ஜோஸ் (ஜெய்பீம்)
ஆஹா...இது செம ட்விஸ்டா இருக்கே...பணப்பெட்டியுடன் வெளியேறியவர் இவர் தானா ?
More from Filmibeat
studio flicks studio flicks awards maanaadu jai bhim ஸ்டூடியோ ஃபிலிக்ஸ் ஸ்டூடியோ ஃபிலிக்ஸ் விருதுகள் மாநாடு ஜெய் பீம்


Click it and Unblock the Notifications











