படே மியான் சோட் மியான் மேக்கிங் வீடியோ.. யப்பா செமயா உழைச்சிருக்காங்களே

மும்பை: 'படே மியான் சோட் மியான்' படக்குழு த்ரில் மற்றும் ஆக்சன் நிறைந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கடுமையாக படக்குழு உழைத்திருக்கிறது என்று கூறிவருகிறார்கள்.

பாலிவுட் முக்கிய இயக்குனரான அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள படம் படே மியான் சோட் மியான். பாலிவுட்டின் இரண்டு பெரிய ஆக்‌ஷன் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

 Bade Miyan chote Miyan Making Video Was Out Now

மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இப்படம், ஹாலிவுட் பிளாக்பஸ்டர்களை நினைவூட்டும் ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது.

தளபதி 68, தளபதி 69, தலைவர் 26.. விஜய்யின் லைன் அப்பை அடுக்கிய புஸ்ஸி ஆனந்த்.. அதை நோட் பண்ணிங்களா?

மற்ற நட்சத்திரங்கள்: இப்படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிக்கிறார். கண்டிப்பாக அவரது நடிப்பு பலரையும் மிரள வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தவிர்த்து சோனாக்‌ஷி சின்ஹா, மனுஷி சில்லர், அலயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்னர். இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'படே மியான் சோட் மியான்' படம் வெளியாக உள்ளது. இப்படம் நிச்சயம் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் எப்போது ரிலீஸ்: வாசு பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் ஆகியோர் படே மியான் சோட் மியானை இணைந்து வழங்குகிறார்கள். அலி அப்பாஸ் ஜாஃபர் எழுதி இயக்க வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், ஜாக்கி பாக்னானி, ஹிமான்ஷு கிஷன் மெஹ்ரா, அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஈத் ஏப்ரல் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் படம் குறித்து கூறுகையில், “பெரிய ஆக்ஷன் படங்களை எடுப்பதில் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று, மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள், அதற்கு என்னிடம் பதில் இல்லை. நான் இதற்கு எப்போதும் இது பயப்படுவதற்கான உள்ளுணர்வு, சாத்தியமற்ற ஒன்றை அடைய முயற்சிக்கும் உள்ளுணர்வு! இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக எடுத்துள்ளோம். மேலும் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது, இது ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி கூறுகையில், "படே மியான் சோட் மியான் படத்தில் இரண்டு பெரிய ஆக்ஷன் நட்சத்திரங்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷ்ராஃப் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர், மேலும் ஆக்‌ஷன் காட்சிகள் பார்ப்பதற்கு ரியலாகக இருக்க வேண்டும் நோக்கத்தில் படமாக்கினோம். இது உண்மையிலேயே நம்பக்கூடியதாக தெரிகிறது" என்று கூறினார்.

மேக்கிங் வீடியோ: இந்நிலையில் படே மியான் சோட் மியான் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டிருக்கிறது. வீடியோவில் டைகர் ஷெராஃப் தோன்று படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். மேலும் பல ஆக்‌ஷன் காட்சிகள் ரியலாகவே படமாக்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி பல ஆபத்தான இடங்களிலும் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதும் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X