X
அஜய் தேவ்கன்
Actor

அஜய் தேவ்கன் பயோடேட்டா

அஜய் தேவ்கன் இந்திய திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திரையுலகில் பிரபலமாக பணியாற்றிவருகிறார். இவர் ஹிந்தி திரையுலகில் பிரபலம் மற்றும் செல்வாக்குடைய நடிகர் ஆவார். இவர் ஹிந்தி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும், நாயகனாகவும் நடித்து புகழ்பெற்றவர்.

திரையுலக தொடக்கம்

அஜய் தேவ்கன் தனது இயற்பெயரான விஷால் என்ற பெயரினை மாற்றி திரையுலகிற்குள் 1991-ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரான மனோஜ் குமார் என்னும் நடிகரின் மகனுடன் இணைந்து 1991-ஆம் ஆண்டு பிஹூல் ஆர் காண்டே என்னும் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள குணச்சித்திர கதாபாத்திரமானது ஹிந்தி திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டதை தொடர்ந்து இவர் அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை தட்டிச்சென்றார்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ஜிகர், திவ்யா சக்தி என பல வெற்றித்திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர் ஹிந்தி திரையுலகில் முன்னனி நடிகராக சித்தரிக்கப்பட்டார்.

தமிழில் திரையுலக அறிமுகம்

அஜய் தேவ்கன் ஹிந்தி திரைத்துறையில் பிரபல செல்வாக்குடைய நடிகராக பணியாற்றி வருகிற இவர், தமிழில் போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிக்கும் தல 60 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் தொடர்ப்பு கொண்டு இவர் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.

திரையுலக பயணங்கள்

இவர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தருவாயில் இயக்குநர்கவும் , தயாரிப்பாளராகவும் அவதரித்துள்ளார். தற்போது பாலிவுட் திரையுலகில் விநியோகஸ்தரராக பணியாற்றிவருகிறார்.

திருமணம்

இவர் 1999-ஆம் ஆண்டு காஜோல் என்னும் பிரபல நடிகையை திருமணம் செய்துள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+