X
அகிலா கிஷோர்
Actress

அகிலா கிஷோர் பயோடேட்டா

அகிலா கிஷோர் இந்திய திரையுலக திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 2013-ம் ஆண்டு பதே பதே என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர், இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சீமா விருதினை பெற்று பிரபலமானவர்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து 2014-ம் ஆண்டு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் ஆவார். இவர் இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகையாக தமிழில் பல்வேறு விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்த இவர், கணினி பொறியாளர் படிப்பினை கற்றறிந்துள்ளார். பின்னர் மாடலிங் மற்றும் அலங்கார பதுமைகளில் ஆர்வம் கொண்ட இவர், 2013-ம் ஆண்டில் பெங்களூரில் நடைபெற்ற அழகு போட்டிகளில் பங்கேற்று 2013-ம் ஆண்டில் மிஸ் இந்திய பெங்களூரு என்ற அங்கீகாரத்தையும் விருதினையும் பெற்றுள்ளார்.

தற்போது இவர் மேல் படிப்பினை முடித்துவிட்டு இன்டெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் 2018-ம் ஆண்டில் டிசம்பர் 4ல் அலன்க்ரிட் சோனா என்பவரை திருமணம் புரிந்துள்ளார். 

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+