ஆனந்த் ராஜ் இந்திய திரையுலகிலும், தமிழக சட்டமன்ற அரசியலிலும் முக்கிய பங்களித்துள்ளார். இவர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிரபலம்
இவர் 1988-ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்பத்திற்கு பின்பு நாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அனால் இவருக்கு வில்லன் கதாபாத்திரமே பொருந்தியுள்ளது. இவர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை மட்டும் ஏற்று நடிக்காமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமாகியுள்ளார்.
1990 முதல் 2000 ஆண்டு காலகட்டங்களில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக திகழ்ந்துள்ளார். இவரின் திரைப்படங்களில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அழுத்தமான வில்லத்தனத்தை உள்ளடக்கி நடித்து புகழ்பெற்றுள்ளார்.
பிறப்பு / திரையுலக தொடக்கம்
இவர் 1958-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டுள்ள இவர், சினிமாவில் நடிக்க விருப்பம்கொண்டுள்ளர். ஆனால் இவரின் பெற்றோர் இவரை காவலராக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் சினிமாவில் பெரிய அளவில் விருப்பம் கொண்டுள்ள இவர், இவரின் பெற்றோரை சம்மதிக்க வைத்து சென்னையில் எம்.ஜி.ஆர் கல்லூரியில் நடிப்பை பற்றி கற்றறிந்துள்ளார்.
1988-ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்கு பின்னர் இவர் ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பிரபலமாகியுள்ளார்.
அரசியல்
இவர் தமிழக பிரபல அரசியல் கட்சியான அ தி மு க கழகத்தின் உறுப்பினரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017-ஆம் ஆண்டு அம்மாவின் மறைவிற்கு பின் அரசியலில் இருந்து முழுவதும் வழகியுள்ளார்.
நகைச்சுவை நாயகன்
அரசியலில் இருந்து வெளியேறிய இவர், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.