அனில் முரளி தென்னிந்திய திரைப்பட பிரபல குணச்சித்திர கதாபாத்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். இவர் மலையாள திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் படத்தினை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி தொடர், மேடை நாடகங்கள் என பல துறைகளில் பணியாற்றி பிரபலமானவர்.
பிறப்பு
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் நகரில் முரளீதரன் நாயர் மற்றும் ஸ்ரீகுமாரி அம்மா என்பார்வர்களுக்கு மகனாக 1967-ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இவரது குடும்பத்தில் அணில் முரளி நான்காவது மகன் ஆவார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார்.
அணில் முரளி சுமா என்பவரை 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.
திரைப்பட அனுபவம்
சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து ஒரு முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ள இவர், மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் பல நாடகங்கள் நடித்து பிரபலமாகியுள்ளார்.
தமிழில் நடிகர் ஷாம் நடித்த "6-மெழுகுவர்த்திகள்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், பின்னர் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு முக்கிய நடிகராக பிரபலமாகியுள்ளார்.
இறப்பு
2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ல் அணில் முரளி, கல்லீரல் நோய் காரணமாக கொச்சியில் உள்ள எர்ணாகுளத்தில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி 56வது வயதில் இறந்துள்ளார்.