அணு இம்மானுவல் பயோடேட்டா

    அணு இம்மானுவல் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா நாட்டில் வாழ்பவர். இவர் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

    அறிமுகம் / திரையுலக தொடக்கம்

    இவர் மலையாள திரையுலகில் 2011-ஆம் ஆண்டு ஸ்வப்னா சஞ்சரி திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் 2016-ஆம் ஆண்டு ஆக்ஷன் ஹீரோ பிஜு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமாகியுள்ளார்.

    அணு இம்மானுவல் தமிழில் 2017-ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் துப்பறிவாளன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு பின்னர் இவரை தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருக்கிறார்.