அபர்ணா தாஸ் - தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகை மற்றும் பிரபல மாடலிங் வடிவழகி ஆவார். இவர் 'பீஸ்ட்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அடுத்தடுத்து டாடா போன்ற வெற்றி படங்கள் நடித்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ளார்.
பிறப்பு
நடிகை அபர்ணா தாஸ், ஓமன் நாட்டில் செட்டில் ஆன மலையாள குடும்பத்தில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்த ஓமன் நாட்டில் கல்வி பயின்ற அபர்ணா தாஸ், தனது கல்லூரி படிப்பினை கோவையில் உள்ள 'ஸ்ரீ கிருஷ்ணா ஆர்ட்ஸ்' கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் வென்றுள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வந்துள்ள அபர்ணா தாஸ், மாடலின் துறையில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்துள்ளார். பின் சிறிசிறிதாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி நடிகையாக ஜொலித்து வருகிறார்.
பிரபலம்
நடிகை அபர்ணா தாஸ், 2018 ஆம் ஆண்டு நிஜன் ப்ரகாசன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். பின் 2019ல் மனோஹரம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் மலையாள சினிமாவில் பலரின் அறிமுகத்தை கவர்ந்தார்.
மலையாள படங்கள் மூலம் அறிமுகமான அபர்ணா தாஸ், பெரிய அளவில் திரைப்பயணத்தில் ஜொலிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் பீஸ்ட் திரைப்படம் நடிகை அபர்ணா தாஸ் திரைவாழ்வில் ஒரு சரித்திர படமாக அமைந்தது. இவரது திரைப்பயணம் மற்றும் இவரின் மார்க்கெட் பெரிய அளவில் படர்ந்து முக்கிய நட்சத்திரமாக ஜொலித்துள்ளார்.
பீஸ்ட் படத்தினை தொடர்ந்து இவர் நடித்த 'டாடா' என்ற தமிழ் படமும் இவரின் திரைப்பயணத்தில் வெற்றி படமாக அமைந்து கொண்டாடப்பட்டது. தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக நடிகை அபர்ணா தாஸ் சினிமா வாழ்க்கையில் பிரபலமாகியுள்ளார்.
திருமணம்
நடிகை அபர்ணா தாஸ் 2024 ஏப்ரல் 24ல் 'மஞ்சுமல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் பரம்போல் என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.