அர்ஜுன் சர்ஜா
Born on 15 Aug 1964 (Age 56) சென்னை
அர்ஜுன் சர்ஜா பயோடேட்டா
அர்ஜூன் புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.
அர்ஜுன் கன்னட குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ஷக்தி பிரசாத் கன்னட திரைப்பட நடிகர் ஆவார். தாயார் லக்ஷ்மி ஒரு ஆசிரியை. அர்ஜுனின் சகோதரர் கிஷோர் கன்னட இயக்குனர். அர்ஜுனிர்க்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரி மகள்கள் உள்ளனர்.
அர்ஜுன் 1973-ம் ஆண்டு ப்ருசே லீஇன் என்ட்டர் தி டிராகன் என்ற படத்தை பர்ர்த்து தன்னுடைய 16-வது வயதில் கராத்தை பயின்றார்.
இவர் பெரும்பாலும் அதிரடித் திரைப்படங்களிலே நடித்துள்ளார். இதனாலும் கூட அவரை அனைவரும் ஆக்சன் கிங் என்று அழைப்பார்.
இவர் நடிகர் மட்டும்மில்லாது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், வசன எழுத்தாளராகவும் உள்ளார்.