X
ஆர்யா
Producer/Actor

ஆர்யா பயோடேட்டா

ஆர்யா  ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார்.

இவர் டிசம்பர் 11, 1980ஆம் ஆண்டு பாலக்காடு, கேரளாவில் பிறந்தார். இவருக்கு சத்யா என்ற ஒரு இளைய சகோதரன் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

2012ஆம் ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம், இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ராஜா ராணி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஆரம்பம் திரைப்படத்தில் இவருடன் சேர்ந்து அஜித் குமார், நயன்தாரா போன்ற பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது.

தற்பொழுது இவர் மீகாமன், புறம்போக்கு, யட்சன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் 2014ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2015ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+