அதர்வா
Born on 07 May 1989 (Age 33) சென்னை
அதர்வா பயோடேட்டா
அதர்வா இந்தியா தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 90-களில் தமிழில் முன்னணி நடிகரான முரளி-யின் மகன் ஆவார். அதர்வா தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 15-க்கும் உட்பட்ட திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு 1989 மே மாதம் 7 ம் நாள் இரண்டாவது குழந்தையாக அதர்வா பிறந்துள்ளார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளனர்.
2010-ம் ஆண்டு பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், இத்திரைப்படத்தின் பிரபலமான பாடலாலும், இப்படத்தின் வெற்றியின் காரணமாக தமிழகத்தில் பிரபலமானார். பின்னர் ஒரு சில வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பாணா காத்தாடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.
இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்து நடிப்பிலும் கைதேர்ந்தவர் என நிரூபிக்கப்பட்டார். பரதேசி திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதினை பிலிம் பேர் விருது, நோர்வே தமிழ் திரைப்பட விழா விருது, எடிசன் விருது, மற்றும் 11த் சென்னை சர்வதேச திரைப்பட விருது ஆகிய விருதுகளை இப்படத்திற்காக பெற்றுள்ளார். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த அதர்வா, 2018-ம் ஆண்டு இவர் நடித்த செம போதை ஆகாதே என்ற திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
தொடர்பான செய்திகள்