twitter
    Celebs»Cho Ramaswamy»Biography

    சோ ராமசாமி பயோடேட்டா

    சோ ராமசாமி மூத்த பத்திரிகை ஆசிரியர், நடக்க ஆசிரியர், நடிகர், வக்கீல், அரசியல் ஆலோசகர் என பன்முக திறமை கொண்டவர். கை ராமசாமி என்பதை விட சோ என்றே அழைக்கப்பட்டவர். இவர் துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் ஆசிரியரும், நிறுவரும் ஆவார்.  அரசியல் துணுக்கு எழுதுவதில் பிரபலமானவர். இவர் 2016  டிசம்பர் 7 -ம் நாள் இயற்கை எய்தினார். 

    அறிமுகம் : 

    ஸ்ரீனிவாச ஐயர் ராமசாமி என்ற சோ சென்னையில் ஸ்ரீநிவாஸன் ராஜம்மாள் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். பி எஸ் உயர்நிலை பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு லயோலா கல்லூரியில் படித்தார். அதன் பின் பி எஸ் சி படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும், சென்னை சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டபடிப்பும் பயின்றார். அதன் பின் 5 வருடங்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் பணியாற்றினார். 

    பகீரதன் எழுதிய தேன்மொழியாள் என்ற மேடை நாடகத்தில் சோ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.  அந்த பெயரினையே தனது அடைமொழி பெயராக மாற்றிக்கொண்டார். பின்னாளில் இவரது உண்மையான பெயரை விட சோ என்ற பெயரே பிரபலமானது. 

    இவர் 1962 -ல் டி டி கே கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1966 -ல் திருமணம் செய்தார். இவருக்கு ஒரு மகனும் மக்களும் உள்ளனர். 

    திரைப்பயணம்  : 

    1963 -ஆம் ஆண்டு சோ பார் மக்களே பார் என்ற படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். 

    இவர் நடித்த பல திரைப்படங்கள் இவரது நடிப்பால் பெரிதும் பேசப்பட்டன. அவற்றில் முகம்மது பின் துக்ளக் எக்காலத்திலும் உணர்த்தும் அரசியல் கதையாக அமைந்தது. மேலும், பல்வேறு படங்களில், நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 

    1963 -லிருந்து 2005 வரை சோ அவர்கள் கிட்ட தட்ட 190 திரைப்படங்கள், 15 நாடகங்கள்,  5 படங்களில் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், தொலைக்காட்சிகளிலும் பணியாற்றியுள்ளார். 

    இவரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெயலலிதா இருவரையும் நெருங்கிய நண்பர்களாவர். இவ்விருவரும் சேர்ந்து 19 திரைப்படங்களிலும், சோ மற்றும் மறந்த முன்னாள் நடிகை ஆச்சி மனோரமாவும் இணைந்து ஜோடியாக 20 திரைப்படங்கள் வரை நடித்துள்ளனர். 

    ராஜ்ய சபா / மாநிலங்களவை உறுப்பினர் :

    முன்னாள் இந்திய குடியரசு தலைவர் கே ஆர் நாராயணன் அவர்களால், ராஜ்ய சபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டவர். குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் 12 எம்பிக்களில் ஐவரும் ஒருவர். காரணம், இவரது அறிவுத்திறன், இலக்கியங்கள், அறிவியல், சமூகம் மற்றும் கலை ஆகியவற்றில்  உள்ள அனுபவமும் திறமையும் தான். சோ அவர்கள் 1999 முதல் 2005 வரை வாஜ்பாயியால் நியமனம் செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். 

    மறைவு :

    சோ ராமசாமி அவர்கள் 2016 டிசம்பர் 7 -ஆம் நாள் காலை 4 .30 மணியளவில் கார்டியாக் அர்ரெஸ்ட்  ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82 .

    அதே மருத்துவ மனையில் தான் இவரது நெருங்கிய தோழி ஜெயலலிதாவும் இவரின் இறப்பிற்கு ஒரு நாள் முன் காலமானார்.