திஷா பதானி பயோடேட்டா

    திஷா பதானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார். இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். இப்படமானது இந்தியாவில் அணைத்து மொழிகளிலும் டப் செய்து வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் திரைத்துறையில் புகழ் பெற்றுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடித்து இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    பின்னர் இவர் 2017-ம் ஆண்டு குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார்.