twitter
    Celebs»Goundamani»Biography

    கவுண்டமணி பயோடேட்டா

    கவுண்டமணி (சுப்பிரமணியன் கருப்பையன்) என்னும் இயற்பெயரினை கொண்டு திரையுலகிற்குள் அறிமுகமான இவர், திரையுலகில் பெற்ற புகழின் அடையாளமாய் இவர் கவுண்டமணி என்று அனைவராலும் அறியப்பட்டார்.

    கவுண்டமணி 1964-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகியுள்ள இவர், பின்னர் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையில் பிரபல நகைச்சுவையாளராக அனைவராலும் கௌரவவிக்கப்பட்டார். இவர் நகைச்சுவையாளராக மட்டும் இல்லாமல் நாயகனாகவும், சிறிய கதாபத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    பிறப்பு / திரையுலக தொடக்கம்

    கவுண்டமணி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் எனும் சிற்றூரில் மே 25-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    கவுண்டமணி 1964-ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் 1965-ல் ஆயிரத்தில் ஒருவன், 1967-ல் செல்வ மகள் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.

    இவர் 1970 மற்றும் 1980-களில் தனக்கென ஒரு கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து வந்துள்ள இவர், பிரபலமாக அறியப்படவில்லை என்னினும், இவருக்கு துணை நகைச்சுவையாளராக நடிகர் செந்தில் இவரின் திரைப்பயணத்திற்குள் இணைந்தார், அதற்கு பின்னர் இவரின் நகைச்சுவைகள் தமிழ் திரையுலகில் பெரிய அளவில் பிரபலமாகியது.

    இவரின் சிறந்த திரைப்படங்கள் என தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் குறிப்பிடப்படும். நக்கல், நையாண்டி என திரைப்படங்களில் இவரின் நகைச்சுவைகள் பெரிதும் பேசப்பட்டது.


    பிரபலம்

    கவுண்டமணி நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

    கவுண்டமணி துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

    இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.

    கவுண்டமணி சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

    அங்கீகாரம்

    நடிகர் கவுண்டமணி-யின் நகைச்சுவை திறனை பாராட்டி பல திரையுலக சார்ந்த அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை அளித்து இவரை கௌரவ படுத்தியுள்ளது.