ஹாரிஸ் ஜெயராஜ் பயோடேட்டா

    ஹாரிஸ் ஜயராஜ்  தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

    சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ். அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். அதேபோல், சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாட ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ், ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதை பறிகொடுத்தார். 

    2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தவர்.

    2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரன், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.