ஹேமமாலினி பயோடேட்டா

  ஹேம மாலினி தமிழ் திரைத்துறையில் தன் திரைப்பயணத்தை தொடங்கி ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனர், எழுத்தாளர் என பணியாற்றியுள்ளார். மேலும் இவர் அரசியலிலும் பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

  பிறப்பு / திரையுலக தொடக்கம்

  ஹேம மாலினி தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான வி எஸ் ஆர் சக்ரவர்த்தி மற்றும் ஜெயா லட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகளாக பிறந்துள்ளார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டு சென்னையில் கல்வி பயின்றுள்ள இவர், தனது 11-ஆம் வகுப்பில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

  ஹேம மாலினி 1961ல் இது சத்தியம் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றி தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், இதனை தொடர்ந்து இவர் 1970-ஆம் ஆண்டு தர்மேந்திரா திரைப்படத்தில் நடித்து ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். 

  இவரின் முதல் ஹிந்தி திரைப்படத்தில் நாயகனாக நடித்த ஹிந்தி நடிகர் தர்மேந்திரா என்பவரை 1980ல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஈஷா தியோல் என்னும் மகளும், காண தியோல் என்னும் மகனும் உள்ளனர். இவரது மகள் ஹிந்தி திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார், இவரின் மகன் ஹிந்தி திரைத்துறையில் இயக்குனராக பணியாற்றிவருகிறார்.

  அரசியல்

  ஹிந்தி திரைப்படங்களில் இயக்குனர், நடிகை, எழுத்தாளர், தயாரிப்பாளர் என பான் முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், 1999-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி (பி ஜே பி) கழகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இவர் 2004-ஆம் ஆண்டு அந்த கட்சியின் சார்பாக போட்டியிட்டு பாராளமன்ற அமைச்சராக பணியாற்றியுள்ளார்.