ஹிப்ஹாப் தமிழா ஆதி பயோடேட்டா

    ஹிப்ஹாப் தமிழா என்பது தமிழ் நாட்டில் உள்ள ஒரு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும்.  இக்குழுவில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவர். இந்தியாவில் உள்ள தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

    ஆதி மைக்கல் ஜாக்சனின் ஜாம் என்ற பாட்டினை கேட்டு அவருக்கு ரசிகரானார். பின் அவரை போலவே ராப் பாடல்கள் பாட முடிவெடுத்து ஆதியும் ஜீவாவும் இணைந்து ஹிப்ஹாப் தமிழா என்ற இசைக்குழுவை ஆரம்பித்தனர். இவர்களின் பல்வேறு பாடல்கள் யூ டூபிலும், ரேடியோவிலும் வெளிவந்தே பிரபலமாயின.