ஜனனி ஐயர் பயோடேட்டா

  ஜனனி ஐயர் இந்திய தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தமிழ் விளம்பரங்களில் நடித்து திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு "திரு திரு துரு துரு" திரைப்படத்திலும், 2010-ம் ஆண்டு "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரம் ஒன்றில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

  இவர் 2011-ம் ஆண்டு பாலா இயக்கிய அவன்-இவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் அறியப்பட்டார், பின்னர் 2014-ம் ஆண்டு இவர் நடித்த தெகிடி திரைப்படம் இவரது திரைவாழ்க்கைக்கு முக்கிய படமாக அமைத்தது.

  இவர் கர்நாடகாவில் கத்திவாக்கம்-பெங்களூரில் பிறந்தவர். இவர் தமிழ் பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சென்னையில் உள்ள கோபாலபுரத்திலுள்ள தயானந்த ஆங்கிலோ வேதப்பாடசாலையில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தார். பின்னர் சென்னையில் உள்ள சவீதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவை படித்து முடித்தார்.

  அவரது படிப்பிற்கு பின்னர் வடிவழகில் கவனம் செலுத்தினார், 150-க்கும் மேற்பட்ட பிராந்திய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார். எனினும் எப்போதும் நடிகையாக கனவு கண்டதாகவும், நடிப்பின் மேல் ஆர்வம் மிக்கவராக கருதுவதாகவும் இவர் கூறியுள்ளார்.
   
  இவர் 2018-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீஸ்ஸின் 2வில் பங்கேற்பாளராக பங்கேற்றுள்ளார். இவர் இந்நிகழ்ச்சியில் இவர் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.