X
ஜீவா
Actor/Producer

ஜீவா பயோடேட்டா

ஜீவா, (அமர்) என்னும் இயற்பெயர் கொண்டுள்ள இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடித்து தற்போது ஒரு முன்னணி நடிகராக பணியாற்றி வருபவர். இவர் தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஆவார். இவரின் தம்பி ரமேஷ் 'ஜித்தன்' படத்தில் நடித்து தமிழ் திரையில் பிரபலமானவர். ஜீவா தமிழ் திரையுலகில் கோ, கற்றது தமிழ், ராம் போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.


பிறப்பு

 

தமிழ் திரைப்பட பிரபல தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஆர். பி. சௌத்ரியின் மூத்த மகனான இவர் தனது சிறுவயதில் இருந்து நடிப்பில் மேல் ஆர்வம் கொண்டு தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.


இவரின் தம்பியான 'ஜித்தன்' ரமேஷ் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றி வருகிறார். இவரை தொடர்ந்து ஜீவன் மற்றும் சுரேஷ் என இரண்டு தம்பிகள் உள்ளனர்.

 

திரைப்பட அறிமுகம்

 

ஜீவா, இவரின் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனத்தின் 50வது படமான 'ஆசை ஆசையை' என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் 2003ம் ஆண்டு நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஆனால் இப்படத்திற்கு முன்பு 1990ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


2003ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் மிக பெரிய வெற்றி பெற்ற 'திக்திக்குதே' படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் ரசிகர்களின் பலரின் கவனத்தை பெற்றார் ஜீவா. 2003ம் ஆண்டு நாயகனாக அறிமுகமான இவர் இந்த ஆண்டு வெளியான இந்த இரண்டு படங்களும் இவருக்கு வர்த்தக ரீதியாக வெற்றி பெற்று தமிழில் பிரபலமானது.


இவரின் 3வது படமான 'ராம்' இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி தமிழில் மிக பெரிய வெற்றியை கண்டுள்ளது. இப்படத்தில் நடித்தற்காக இவருக்கு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விருது அமைப்பு சிறந்த நடிகருக்கான விருதினை வழங்கி இவரை பெருமைப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் மக்கள் போற்றும் நடிகரான சிவாஜி கணேசனை தொடர்ந்து இவர் மட்டுமே இந்த விருதினை பெற்றுள்ளார்.


பிரபலம்


ஜீவாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக இயக்குனர் அமீர் இயக்கிய 'ராம்' திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் சுவாரஸ்ய திரைக்கதை தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து பிரபலமானது. இன்றும் இப்பட பாடல்களை பலர் விரும்புகின்றனர்.


அறிமுக நாயகனாக தமிழ் திரையில் பணியாற்றி வந்து இவரின் திரைப்பயணத்தில் அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்களான ராம், ஈ, கற்றது தமிழ், கோ ஆகிய படங்கள் இவரை ஒரு முன்னணி நாயகனாக உயர்த்தியுள்ளது.


2012ம் ஆண்டு இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்பட முதல் சூப்பர் ஹீரோ படமான 'முகமூடி' திரைப்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமாகியுள்ளார். இப்படம் தான் தமிழ் திரையுலகில் உருவான முதல் சூப்பர் ஹீரோ படமாகும். பின்னர் 2016ம் ஆண்டு 'போக்கிரி ராஜா' என்ற திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படம் இவரது 25வது தமிழ் திரைப்படமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+