கபிலன் வைரமுத்து பயோடேட்டா

    கபிலன் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர், மற்றும் சமூக ஆரவாளர் ஆவார். இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் இளைய மகன்.

    கபிலன் வைரமுத்துவின் தயார் பொன்மணி வைரமுத்து தமிழ் பட்டதாரி. இவர் பல்வேறு கவிதைகள், புத்தகங்களை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் 22 வருடங்களாக பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கபிலன் வைரமுத்துவின் சகோதரர் மதன் கார்க்கி சென்சார் நெட்ஒர்க் படிப்பில் பி.எச்.டி முடித்துள்ளார். அவரது மனைவி ரம்யா மருத்துவர். மதன் கார்க்கியும் பாடலாசிரியர் ஆவார்.