X
கார்த்திக் சுப்பராஜ்
Director/Producer/Screenplay Writer

கார்த்திக் சுப்பராஜ் பயோடேட்டா

கார்த்திக் சுப்புராஜ், தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். 2012-ம் ஆண்டு குறைவான பட்ஜெட்டில் உருவான திகில் மற்றும் திரில்லர் திரைப்படமான பீட்சா திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் என சைமா விருதினை பெற்றுள்ளார்.

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது பள்ளிப் படிப்பை மதுரை எஸ்.பி.ஒ.ஏ பதின் மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியலும் முடித்தார். 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானார்.

இவர் திரையுலகிற்கு வரும் முன்னர் பல்வேறு குறும் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சி நடத்திய தென்னிந்தியா குறும்பட போட்டி நாளைய இயக்குனர் தொடரில் காட்சிப்பிழை படத்தினை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து ராவணம், துரு, வி, நீர் என பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பின்னர் 2014-ம் ஆண்டில் ஜிகர்தண்டா, 2016-ல் இறைவி, 2018-ல் மெர்குறி என வெற்றிப்படங்களை இயற்றிய இவர், 2019-ம் ஆண்டு பேட்ட திரைப்படத்தினை இயக்கியுள்ளார். அத்துடன் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+