கோவை சரளா பயோடேட்டா

    கோவை சரளா முக்கியத் துணைப்பாத்திரங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் நகைச்சுவையாளினி ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், அவர் சுமார் 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகிய விருதுகளை  பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.

    கோவை சரளா தமிழ்நாடில்,  கோயம்புத்தூரில்,  ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.  சரளா எம்.ஜி.ஆர் படங்களை பார்த்த பிறகு, அவருக்கு நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. அவர் படிக்கும் போதே அவரது சகோதரி மற்றும் தந்தையின் ஆதரவுடன் திரையுலகில் நுழைந்தார்.

    அவர் 9 வகுப்பு படிக்கும் போது அவரது முதல் படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது முதல் படத்தில் விஜயகுமார் மற்றும் கே.ஆர்.விஜயா-வுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தின் பெயர் வெள்ளித் ரதம்.

    நகைச்சுவையாளர் கோவை சரளா இதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை.