X
குறளரசன்
Music Director/Actor

குறளரசன் பயோடேட்டா

குறளரசன் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2017-ம் ஆண்டு வெளிவந்த பாண்டியராஜ் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த "இது நம்ம ஆளு" திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக திரையுலகிற்குள் அறிமுகமானவர். இவர் நடிகராக அலை, ஒரு வசந்த கீதம், பெற்றது பிள்ளை, தாய் தங்கை பாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2001-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர நடிகருக்கான விருதினை "சொன்னால்தான் காதல" திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவரின் தமையனான நடிகர் சிலம்பரசன் தனது தந்தையைப் போன்றே தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் தமிழில் "இது நம்ம ஆளு" திரைப்படத்திற்கு இசையமைத்து, தற்போது பாலிவுட் திரையுலகில் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார்.

திருமணம் 
இவர் சமீபத்தில் 2019 பிப்ரவரி 16ல் இஸ்லாமியா மதத்திற்கு மதமாறியுள்ளார். ஏனினும் இவர் பெயர் மாற்றிக்கொள்ளவில்லை. இவர் நபீலா அஹமத் என்ற பெண்ணை காதலிக்கிறார். இக்காரணத்தால் இவர் மதமாறியுள்ளார். குறளரசன் - நபீலா அஹமத் இவர்களுக்கு 2019 ஏப்ரல் 29ல் திருமணம் நடக்கவுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+