லட்சுமி மேனன் பயோடேட்டா

    லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாள படங்களிலும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்து தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.

    சுந்தர பாண்டியன் திரைப்படம் வெளிவரும் முன்னரே கும்கி திரைப்படம் வெளியானதால்  இவர் கும்கி திரைப்படம் மூலமே பிரபலமானார். தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துவருகிறார்.