twitter
    Celebs»Lokesh Kanagaraj»Biography

    லோகேஷ் கனகராஜ் பயோடேட்டா

    லோகேஷ் கனகராஜ் -  தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தினை இயக்கி 2017 ஆம் ஆண்டு இயக்குனராக பிரபலமானவர். இவர் இப்படத்திற்கு முன் அவியல் என்னும் படத்தில் ஒரு சிறுகதையை 2016ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.

    பிறப்பு
    லோகேஷ் கனகராஜ் 1986ல் கோவையில் பிறந்துள்ளார். கிண்ணத்துக்கடவு என்னும் நகராட்சியில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள பள்ளியில் தனது கல்வியை முடித்த லோகேஷ், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தை வென்றார். 

    திரையுலக தொடக்கம்
    ஒரு வங்கியில் வேலை செய்து வந்துள்ள லோகேஷ் கனகராஜ், நாளைய இயக்குனர் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். பின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த அவியல் என்னும் படத்தில் ஒரு சிறிய கதையை இயக்கி இயக்குனராக அவதரித்தார், லோகேஷ் கனகராஜ்.

    பிரபலம்
    அவியல் படத்திற்கு பின் இவர் மாநகரம் படத்தினை இயக்கி 2017ஆம் இயக்குனராக திரையுலகில் அவதரித்தார். சிறு பட்ஜெட் படமாக வெளியான இத்திரைப்படம் பெரிய அளவில் விமர்சனம் ரீதியாக மக்களை கவர்ந்தது.

    மாநகரம் படத்தினை வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை  நாயகனாக வைத்து 'கைதி' படத்தினை இயக்கினார். இப்படம் 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியின் மூலம் தனது மூன்றாவது படத்திலையே விஜய்-யை நாயகனாக கொண்டு 'மாஸ்டர்' படத்தினை இயக்கி தமிழ் முக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    லோகேஷ் (LCU) திரைப்படங்கள்

    • கைதி (2019)
    • விக்ரம் (2022)
    • லியோ (2023)

    எல் சி யு (LCU)
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் சினிமா தரத்திற்கு தமிழ் சினிமாவை உயர்த்தியுள்ளார். தனது ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் சில ஒற்றுமைகளை திரைக்கதையில் வடிவமைத்து இயக்கி வருகிறார். கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படம் என தனது அடுத்தடுத்த படங்களில் ஒவ்வொரு படத்தையும் இணைக்க திட்டமிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ்.